ஒரு குடும்பத்தின் எதிர்காலம் அதன் வாரிசான குழந்தைகள் தான். அதற்காக இன்று தவம் கிடப்போர் ஏராளம்.
குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும்.குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு தான் தெரியும் குழந்தையின் அருமை.
32 வயது மதிக்கத்தக்க திவ்யா என்ற பெண் குழந்தையின்மை சிகிச்சைக்காக கணவருடன் வந்திருந்தார்.
அவர்கள் சொன்னதாவது: திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது, பல சிகிச்சைகள் செய்தும், நிறைய பணம் செலவழித்தும் பயன் இல்லை. இலவச மருத்துவ ஆலோசனைஇருப்பதை நாங்கள் பார்த்தோம், கடைசி நம்பிக்கைக்காக நாங்கள் இங்கு வந்தோம்.
பரிசோதனைக்கு பிறகு, ஸ்கேன் செய்து டாக்டர்.சிலம்புச்செல்வி madam அவர்கள் பரிசோதனை நிலையைத் தெளிவாக விளக்கினார்.
அந்து பெண்ணுக்கு கருப்பையில் கட்டிகள்
இருந்தது (Multiple Fibroids).மேலும் கருக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை தான் சிறந்தது என்று அறிவுரை வழங்கப்பட்டது மேலும் மாயாமெக்டோமி (myomectomy) பரிந்துரைக்கப்பட்டது
அறுவை சிகிச்சையில் கர்பப்பை கட்டிகள் அகற்றப்பட்டு மேலும் கருக்குழாயும் சரிசெய்யப்படது. இப்போது அவர் குழந்தையின்மை
சிகிச்சைக்கு IVF பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது.
குழந்தையில்லாத நிலை இன்று எங்கும் நிறைந்து இருக்கிறது.சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சை தான் இதற்கு சரியான தீர்வு ஆகும்.