35 வயது மதிக்கத்தக்க பெண்மணி நமது மருத்துவமனைக்கு வயிற்று வலி காரணமாக வந்தார். திருமணமாகி அவருக்கு ஒரு குழைந்தை இருப்பதாகவும் மாதவிடாயின் போது அதிக படியான உதிரப்போக்கு போன்ற தொந்தரவுகள் இல்லை என்றும் ஆனால் அடி வயிற்று வலி மாதம் முழுவதும் இருப்பதாக கூறினார்.
ஸ்கேன் செய்து பார்த்த போது அவருக்கு 10cm அளவில் முட்டை பையில் நீர் கட்டி இருப்பது கண்டரியப்பட்டது. கட்டி பெரிதாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து கொள்வது தான்
சிறந்தது என்று நமது மகப்பேறு மருத்துவர் சிலம்புச்செல்வி மற்றும் மருத்துவர் எஸ்.பி.ஆர்த்தி சுமல்தா பரிந்துரைத்தனர்.
அந்து பெண்ணின் ஒப்புதலை பெற்றபின்
லேபராஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் அவரது முட்டை பைக்கு பாதிப்பு இல்லாமல் அந்த நீர் கட்டி நீக்கப்பட்டது.
அடுத்த நாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஒரு வாரத்துக்கு பிறகு ரெகுலர் பரிசோதனைக்கு வந்தவர், அவர் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் இயல்பான வேலை செய்ய முடிகிறது என்று சந்தோஷமாக கூறினார்.